இலங்கைக்கு ​வெளியே நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல் மற்றும் குடியுரிமை சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல்

இங்கு கீழ் சொல்லப்பட்ட  சகல ஆவணங்களும் ஒழுங்கு முறையே இரு பிரதிகள் செய்யப்பட்டு வெவ்வேறு இரு கோவைகள் மூலம் சமர்பிக்கப்படல் வேண்டும்​ அத்துடன் மூலப்பிரதிகள் (Originals) யாவும் தனியாக சமர்பிக்கப்படல் வேண்டும்.

குழந்தை பிறந்து ஒரு வருடத்தின் பின் விண்ணப்பிக்கப்படும் பிறப்பு பதிவுகள் தொடர்பில் கொழும்பு பதிவாளர் நாயகத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பே பதிவு மேற்கொள்ளப்படும், இவ்வாறான சந்தர்பத்தில்  சகல ஆவணங்களும் ஒழுங்கு முறையே மூன்று பிரதிகள் செய்யப்பட்டு வெவ்வேறு மூன்று கோவைகள் மூலம் சமர்பிக்கப்படல் வேண்டும்​.

  1. பூரணப்படுத்தப்பட்ட  குடிரிமை சான்றிதழ்  விண்ணப்பபத்திரம் (படிவம் குடிரிமை1)

  2. பிறப்பினை பதிவுசெய்வதற்கு பூரணப்படுத்தப்பட்ட B4 விண்ணப்பபடிவம் (பிறப்பு பதிவு குழந்தை பிறந்து 03 மாதத்துக்குள் மேற்கொள்ளப்படுமாயின்)அல்லது B6 விண்ணப்பபடிவம் (பிறப்பு பதிவு குழந்தை பிறந்து 03 மாதத்துக்கு பின் மேற்கொள்ளப்படுமாயின் )​                                                  

  3. இத்தாலி COMUNE யில் வழங்கப்பட்ட பெற்​றோரின் பெயர் உள்ளடங்பிய NASCITA பிறப்பு சான்றிதழ் மூலப்பிரதி

  4. பெற்றோரின் விவாக சான்றிதழ்

  5. தாய் மற்றும் தந்தையின் பிறப்பு சான்றிதழ்

  6. தாய் மற்றும் தந்தை வெளிநாட்டில் பிறந்தவர்களாயின் அவர்களின் இலங்கை பிரஜாவுரிமை சான்றிதழ்.

  7. குழந்தை பிறப்பின்போது தாய் மற்றும் தந்தையின் கடவுச்சீட்டு

  8. தாய் மற்றும் தந்தையின் தற்போதைய கடவுச்சீட்டு

  9. குழந்தை பிறப்பின்போது தாய் மற்றும் தந்தை இத்தாலியில் தங்கியிருப்பதற்கான SOGGIORNO அனுமதிபத்திரம்.

 பிறப்பு பதிவு படிவம் - B4
 பிறப்பு பதிவு படிவம் - B6
குடியுாிமை சான்றிதழ் விண்ணப்பம்
பதிவுகளை தேடுவதற்கான  விண்ணப்பம்

Embassy of Sri Lanka  - Via Adige, 2 - 00198 Rome - Tel. 06 8840801 © 2023 by www.sitiwebscontati.com. All rights reserved