காணமற்போன  கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்தல்

காணாமற்போன அல்லது களவாடப்பட்ட கடவுச்சீட்டு தொடா்பிலான பொலிஸ் புகாா் அறிக்கையுடன் ​பின்வரும் தேவைப்பாடுகள் பூா்த்திசெய்யப்பட்டு கடவுச்சீட்டுக்கான  விண்ணப்பம் சமா்ப்பிக்கப்படல் வேண்டும்.

(1) படிவம் K -35 A ல் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் 

(2) காணாமற்போன அல்லது களவாடப்பட்ட கடவுச்சீட்டு தொடா்பான முறையீட்டு படிவம்

      Complaint Form

(3) காணாமற்போன கடவுச்சீட்டுக்காக "D" விண்ணப்பம் பூா்த்திசெய்யப்பட்டு

     இணைக்கப்பட வேண்டும' - Form D

மூல விண்ணப்படிவம் நிகராக பூர்த்திசெய்யப்பட்டு இங்கு கீழ் சொல்லப்படும் சகல​ ஆவணங்களின் பிரதிகளும் இணைக்கப்படவேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட மூல விண்ணப்பபடிவமானது ஆவணங்கள் சகிதம் மேலதிக பிரதியொன்று எடுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக (Two Sets) சமர்ப்பிப்பட வேண்டும்

​​4.5 செ. மீ உயரமும் 3.5 செ. மீ அகலமும் கொண்ட மிக தெளிவான 04 புகைப்பட பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். புகைப்படமானது கடைசி 03 மாதங்களுக்குள் பெறப்பட்டிருத்தல் வேண்டுமென்பதுடன் காதுகள் தெளிவாக தெரிகின்ற,  இருளற்ற , நேர் பார்வை உடைய நிழல்களற்ற, மூக்கு கண்ணாடி அணியாப,  தொகுப்பு செய்யப்படாத, மற்றும் புகைப்படத்தின் பின்னமைந்த வர்ணம் ​அணிந்திருக்கும் உடையின் வர்ணத்திலும் வேறுபட்டிருத்தல் வேண்டும்.

ஆவணங்கள் யாவும் A4 அளவுகொண்ட கடதாசி தாளில் மட்டுமே பிரதி செய்யப்பட்டு சமாப்பிக்கப்படல் வேண்டும். மூல ஆவணங்கள் யாவும் (Original Documents)  தனியாக சமாப்பிக்கப்படல் வேண்டும்(மொழி பெயர்ப்பு  செய்யப்பட்ட பிரதி மூலப் பிரதி ஏற்கப்படமாட்டாத)

 

1.  பிறப்பு சான்றிதழ் மூலப்பிரதி

 

2.  விவாகத்தின் பின் பெயர் மாற்றம் பெற்றிருப்பின் அதனை உறுதிப்படுத்துவதற்கான    

     விவாக சாட்சி பத்திரம்

3.  வெளிநாட்டில் பிறந்தவராயின் இலங்கை பிரஜாவுரிமை சான்றிதழ் அல்லது ​அதற்கு பணம்

     செலுத்திய பற்றுச்சீட்டு பிரதி

4.  பொலிஸ் புகாா் அறிக்கை (Police Complaint Report)

5.  காணமற்போன கடவுச்சீட்டின் தகவல் பக்க நிழற்படபிரதி (இருப்பின்)

      (Copy of Data Page - If available)

6.  இத்தாலியில் தங்கியிருப்பதற்கான SOGGIORNO அனுமதிபத்திரம் 

கடவு சீட்டுக்கான விண்ணப்பம்
பிரகடன பத்திரம் -  "D" விண்ணப்பம்
                     Form D
STOLEN or LOST SRI LANKAN PASSPORT - COMPLAINT FORM
දිවුරුම් ප්‍රකාශය/பிரமாண பத்திரம் / Affidavit

Embassy of Sri Lanka  - Via Adige, 2 - 00198 Rome - Tel. 06 8840801 © 2023 by www.sitiwebscontati.com. All rights reserved